ஒரு டீ
மூலிகை டீ செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – ஒரு துண்டு,
சுக்கு – சிறு துண்டு,
துளசி இலை – 10,
ஓமவல்லி – 2,
ஏலக்காய் – 3,
பட்டை – 1,
கிராம்பு – 1,
மிளகு – 10,
தனியா – கால் டீஸ்பூன்,
வெல்லம் – கால் கப்,
பால் – இரண்டு டம்ளர்,
தண்ணீர் – ஒரு டம்ளர்,
டீ தூள் – 2 டீஸ்பூன்
மூலிகை டீ செய்முறை விளக்கம்:
முதலில் தண்ணீர் சேர்க்காத பாலை சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். அதனை 2 கப் அளவிற்கு தனியாக எடுத்து வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். வெல்லம், டீ தூள் மற்றும் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.
மூலிகைப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியதும், இரண்டு டீஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். டீ தூள் நன்கு கொதித்ததும், ஏற்கனவே ஆற வைத்த பாலை சேர்த்து கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அதனுடன் பொடிப்பொடியாக செய்து வைத்த வெல்லத்தை கலந்து கொள்ளுங்கள். மீண்டும் டீ-யை கொதிக்க விடுங்கள். அந்த கொதி நிலையிலேயே வெல்லம் கரைந்து விடும்.
வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் சேர்க்கலாம். ஆனால் சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியம் மிகுந்தது என்பதால் கூடுமானவரை வெல்லத்தை சேர்ப்பது நல்லது. அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி பரிமாற வேண்டியது தான். மழைக் காலங்களில் இந்த டீ-யை பருகினால் அற்புதமான மணமுடன், அலாதியான சுவையுடன் இருக்கும். ஒரு நாளை நமக்கு உற்சாகத்துடன் வைக்க எழுந்ததும் முதல் வேலையாக இந்த டீயை பருகினால் நல்லது. நீங்களும் முயற்சி செய்து ருசித்து பாருங்கள்.
Please Don't get addiction.
Comments
Post a Comment